ETV Bharat / international

புதிய கட்டத்துக்குள் நுழையும் இந்திய-சீன உறவு ?

author img

By

Published : May 26, 2020, 9:19 PM IST

டெல்லி : இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், இருநாட்டு உறவு புதிய கட்டத்துக்குள் நுழைவதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

china india relationship  new stage
china india relationship new stage

குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "நேர்மறையான சமிஞ்சைகள் இல்லாமை, மற்றும் இந்தியாவின் சமீபகால போக்கு இந்தியா-சீனா எல்லையில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

இந்நாடுகளின் நல்லுறவு புதிய கட்டத்துக்குள் நுழைவது போன்று தெரிகிறது. ஆனால், இதற்கு பலகாலம் ஆகலாம்...." என எழுதப்பட்டுள்ளது. இந்த கருத்து சீனாவின் நிலைப்பாட்டை உணர்ந்ததாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுயில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிசெய்யவில்லை.

மிகவும் குறைந்த அளவு ஜனத்தொகை கொண்ட லடாக், பெரும்பாலும் பனியாலே மூடப்பட்டிருக்கும். ஆனால், கோடை காலத்தில் பணி உருகி நிலம் கண்ணுக்குத் தெரியும்போது இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்துக்குக் காரணம், மே-5ஆம் தேதி நடந்த மோதல் சம்பவம். லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பங்கோங் சா ஏரியின் வடக்கு கரையில் இருநாட்டு ராணுவத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதுபோல், மே 9ஆம் தேதி சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள நான்குகள் லா மலைப் பகுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. இந்த கைகலப்பில் குறைந்தது 100 (இருதரப்பு) ராணுவத்தினர் காயமடைந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, சீனாவை விமர்சித்து அமெரிக்க பாதுகாப்புப் படை 'சீனாவை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் யுத்திகள்' என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "மஞ்சள் கடல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல், செய்வான் நீரிணை, மற்றும் சீனா-இந்திய எல்லைகளில் ராணுவ, துணை ராணுவப் படையைக் கொண்டு சீனா அத்துமீறல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆசிய நாடுகளின் இந்தோ-பசிபிக் கண்ணோட்டம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுதந்திரமாக வைத்திருக்கும் ஜப்பானின் கனவு, இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை, தைவானின் புதிய தென் சீனக் கடல் கொள்கைகளை ஒத்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளது.

லடாக் எல்லையில் நிலவிவரும் பதற்றம் விரைவில் தணியப் போவதில்லை. நீண்ட மோதலுக்கு இருநாட்டு ராணுவத்தினரும் தயாராகி வருகின்றனர். சீனா-அமெரிக்கா மோதல் இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கக்கூடும்.

(ஈடிவி பாரத் மூத்த பத்திரிகையாளர் சன்ஜிப் கிர் பரௌவா எழுதிய செய்தியின் தமிழாக்கம் இது)

இதையும் படிங்க : பாலியல் தேவைகளுக்காக அணுகிய இயக்குநர்கள் - நடிப்பில் இருந்து விலகிய கல்யாணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.