ஈஸ்டர் தினமான ஞாயிற்று கிழமை இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், சில இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சிறிசேனா குண்டு வெடிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.