ETV Bharat / international

Afghanistan Taliban : தலிபானை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் இம்ரான் கான் அரசு - ஆப்கானிஸ்தான் தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான் மூலம் பாகிஸ்தான் (Afghanistan Taliban) செலுத்திவரும் தாக்கம், அதன் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

இம்ரான் கான் அரசு
இம்ரான் கான் அரசு
author img

By

Published : Nov 12, 2021, 7:58 PM IST

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தையை டெல்லியில் தலைமை தங்கி நடத்திய அதே வேளையில், பாகிஸ்தானும் Troika Plus என ராஜாங்க பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாத்தில் நடத்தியது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, ஆப்கனுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகள் எழத் தொடங்கியுள்ளன. பேச்சுவார்த்தைக்கான அஜித் தோவலின் அழைப்பை சீனா மற்றும் பாகிஸ்தான் நிராகரித்தாலும், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட மற்ற ஏழு நாடுகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி, ஆப்கன் மக்களுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற்றுத்தர இந்நாடுகள் நாட்டம் தெரிவித்துள்ளன.

தெரிக் இ தலிபான் ஆதிக்கம்

தலிபான்கள் ஆதிக்கம் குறித்து இந்தியா ஐயப்பாட்டை எழுப்பிவரும் நிலையில், பாகிஸ்தான் அரசோ தலிபான் அரசுக்கு நிதியுதவி வழங்கி பலப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. பொருளாதார சீர்க்கேடால் சிக்கித்தவிக்கும் ஆப்கனுக்கு உதவவில்லை என்றால் அது பேரழிவை உருவாக்கும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தெரிக் இ தலிபான் (Tahreek-e -Taliban) அமைப்புடன் இம்ரான் கான் அமைப்பு அமைதி உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும், தலிபான்களின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

தெரிக் இ தாலிபான் அமைப்பினர் தலிபான் தலைமையுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள். இவர்களின் ஆதிக்கம் என்பது இம்ரான் அரசுக்கு எல்லைப் பாதுகாப்பில் பெரும் குடைச்சலைக் கொடுக்கும். எனவே, தற்போதைய சூழலில் இந்தியா தலிபானுக்கு எதிர்க்குரல் தந்தாலும், பாகிஸ்தானோ தலிபான் அழுத்ததிற்கு பணிந்து செல்லும் சூழலில் உள்ளது.

தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹர்கத் உல் அன்சர் உள்ளிட்ட பல அமைப்புகளை பாகிஸ்தான் தனது தேவைக்கு பயன்படுத்தியுள்ளது. ஆனால், தெரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானுக்கே ஊறு விளைவிக்கும் விதமாக உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வருவதால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் உள்ளது. ஆப்கனில் நடக்கவிருக்கும் நகர்வுகளுக்கு மேற்கு நாடுகள் முக்கிய பங்காற்றவுள்ளன.

இந்தியா கற்க வேண்டிய பாடம்

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவை எதிர்கொள்ள இம்ரான் கான் அரசு பல முனைத் திட்டங்களை வகுக்கிறது. ராஜரீக உறவு மட்டுமல்லாது மதத்தையும் பாகிஸ்தான் துணைக் கொள்கிறது. இதற்காக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் உதவி பாகிஸ்தான் நாடுகிறது. கத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான கருத்தை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் தொடர் பரப்புரையின் தாக்கத்தால் இது நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கான தூதராக மசூத் கானை (Masood Khan) பாகிஸ்தான் நியமித்துள்ளது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர் மசூத் கான். ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் என பிரிவினைவாதக் குழு பிறந்த மிர்பூரைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க தூதராக நியமித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் அஞ்சுவது என்னவென்றால், தெரிக் இ தலிபான் போன்ற பயங்கரவாதக் குழுக்களால் பயிற்சி பெற்றவர்களை எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்பதே.

ஆப்கன் விவகாரம் அமெரிக்காவுக்கு பெரும் பாடத்தை புகட்டியுள்ளது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வித்தை தெரிந்த அமெரிக்காவுக்கு, இந்த விவகாரத்தில் தலிபான் எதிர்பாராத அமைப்பின் எழுச்சி பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட தலிபான், தற்போது பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்படுகிறது.

தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு கையை புண்ணாக்கிக் கொள்ளக்கூடாது என்ற பாடம், ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பொருந்தும். தனக்கு போதிய அறிவற்ற விஷயங்களில் நாம் தேவையற்ற நிலைப்பாடு கொள்ளாமல் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பதே இந்தியாவுக்கு உகந்த முடிவாக இருக்கும்.

இதையும் படிங்க: நீங்கள் இந்து என்றால் இந்துத்துவம் எதற்கு? ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக சாட்டை சுழற்றும் ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.