மாஸ்கோ: ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். நேற்று காலை காபூலை தாலிபன்கள் சுற்றிவளைத்தனர். இதன்பின்னர், ஆட்சியை ஒப்படைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாலிபன்களுக்கும், அரசுக்கும் இடையில் நடந்ததாக கூறப்பட்டது.
ஆட்சியை அஷ்ரப் கானி தாலிபன்களிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். அவ்வாறு தப்பிக்கும்போது, ஹெலிகாப்டர், நான்கு கார்கள் முழுவும் பணத்தை நிரப்பிக்கொண்டு சென்றதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. .
ஆட்சி வீழ்ச்சியடைப்போகிறது என்பதை உணர்ந்த அஷ்ரப் கானி, நான்கு கார்களில் பணத்தை நிரப்பியிருந்ததாகவும், சில பணமூட்டைகளை ஹெலிகாப்டரில் அடைக்க முடியததால், அந்தப் பணம் விமான நிலையத்தில் ஓடுபாதையிலேயே இருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஷ்ரப் கானி அறிக்கை
நாட்டை விட்டு வெளியேறியவுடன் தனது பேஸ்புக் பதவில் அஷ்ரப் கானி, "தாலிபன்கள் என்னை விலக செய்துவிட்டனர். அவர்கள் காபூலையும், காபூல் மக்களையும் தாக்கவே வந்திருக்கிறார்கள். ரத்த களறி ஏற்படுவதை தவிர்க்க நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என கருதினேன்
எண்ணற்ற மக்கள் காபூலின் அழிவை பார்த்திருப்பார்கள். அறுபது லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் இது மனிதப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இது ஒரு வரலாற்றுச் சோதனை.
துப்பாக்கிகள், வாள்களின் தீர்ப்பில் அவர்கள் வென்றுவிட்டார்கள். தற்போது ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. மக்களின் இதயங்களையும், சட்டத்தையும் வெல்ல அனைத்து மக்கள், தேசங்கள், பல்வேறு துறைகள், சகோதரிகள், பெண்களின் பாதுகாப்பை தாலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
தஜிகிஸ்தானுக்கு தப்பியோட்டம்
அஷ்ரப் கானி, தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இருவருடன் தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாகவும், அந்நாட்டு அரசு அவர்களை ஏற்காத காரணத்தால், ஓமனில் அவர்கள் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களில் அவர் அமெரிக்காவில் தஞ்சமடைவார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Malaysian PM resigns: பதவியை ராஜினாமா செய்த மலேசியப் பிரதமர்