ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இரு தரப்புக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள உருஸ்கான் என்ற மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளின் அயுதங்கள், வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டன.
அதேபோல், நேற்று பாஷ்டிரோட் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில், பாதுகாப்புப் படையினரால் எட்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.