ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டில் லோகர் என்னும் பகுதியில், அந்நாட்டின் அரசுக்கும் ராணுவத்திற்கு ஏற்பட்ட உள்நாட்டு போரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் அதிகப்பட்சமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாகினர்.
அந்த போரில் வீசப்பட்ட கண்ணிவெடியால் அப்பகுதியைச் சேர்ந்த அஹமத் என்னும் சிறுவன், தன் ஒரு காலை விபத்தில் பறிக்கொடுத்தான். இந்நிலையில் இன்று அந்த சிறுவனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு செயற்கை மாற்று கால் பொறுத்தப்பட்டது. இதனால் இழந்த காலைப் பெற்ற சிறுவன் மருத்துவனையிலையே குதுகலமாக நடனமாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.