ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை (மார்ச் 12) கார் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 47 பேர் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Afghan bomb Afghan bomb kills 8 UN slams high civilian deaths in Afghanistan UN Security Council car bomb blast in Afghanista blast in afghanistan ஆப்கானிஸ்தானில் கார் குண்டு கார் குண்டு கார் வெடிகுண்டு ஆப்கானிஸ்தான்

author img

By

Published : Mar 13, 2021, 6:37 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹீரத் மாகாணத்தில் இந்தக் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். காயமுற்ற 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தகவலை அம்மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் ரபீக் ஷேர்ஸாய் உறுதிப்படுத்தினார்.

குண்டு வெடிப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில், “குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் ஒருவர் பாதுகாப்பு படை வீரர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 11 வீரர்கள் காயமுற்றனர். மீதமுள்ளவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்கும். இந்தத் தாக்குதலில் சிக்கி 14 வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.

சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறுகையில், “பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை” என்றார்.

எனினும் தாக்குதல் நடத்திய பாணியை பார்க்கும் போது இது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலாக இருக்கும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.