வங்க தேசத்தில் நேற்று (ஏப்ரல்.5) 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்துள்ளது. அப்போது சூறாவளிக் காற்று வீசியதில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன.
குறிப்பாக கெய்பந்தா மாவட்டத்தில் புல்ச்சரி, பாலாஷ்பரி, சுந்தர்கஞ்ச் உபசிலாஸ் ஆகிய இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதுதொடர்பாக பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "ராஜ்ஷாஹி, நடோர், பப்னா, சிராஜ்கஞ்ச், போகுரா, டாங்கைல், மைமென்சிங், மெஹெர்பூர், குஷ்டியா, ராஜ்பரி, ஃபரித்பூர், ஜஷோர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்துள்ளது. டாக்காவில் மட்டும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அங்கு சுமார் 64 கிமீ வேகத்தில் காற்றுவீசியது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போலாந்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் வெளியேற்றம்!