ரிங் ஆஃப் ஃபயர்- ஜப்பானிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் 'தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு' ஆகும். இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.
குறிப்பாக 2011ஆம் ஆண்டு, மியாகி மாகாணத்திற்கு கிழக்கே சுமார் 130 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பயங்கர நாசத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகத்தான், சுனாமி பேரலை உருவாகி புகுஷிமா (Fukushima) அணு உலை தகர்ந்தது. சுமார் 16 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியாகி மாகாணம் கடற்கரையிலிருந்து சுமார் 50 கி.மீட்டருக்கும் குறைவான தூரத்திலும், பசிபிக் கடற்பரப்பிற்கு அடியில் 41.7 கிலோமீட்டர் தொலைவிலும், சுமார் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "இன்று அதிகாலை 5.30 மணியளவில், சுமார் 50 அடி ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்யும் கட்டத்தை எட்டிய மருத்துவக் குழுக்கள்