ETV Bharat / international

கிழக்கு இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகுவில் இன்று (ஏப். 4) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு காலநிலை மற்றும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

5.9 magnitude quake hits eastern Indonesia

author img

By

Published : Apr 4, 2021, 11:09 AM IST

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அம்போனிலிருந்து தெற்கே 163 கி.மீ. தொலைவில் அதிகாலை 1.42 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் மாலுகுவில் உள்ள பல தீவுகளில் உணரப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. அத்துடன் நல்வாய்ப்பாக சுனாமி எச்சரிக்கையைத் தூண்டிவிடவில்லை.

பரந்துவிரிந்த பசுபிக் பெருங்கடலின் 'ரிங் ஆஃப் ஃபயர்' (நெருப்பு வளையம்) என்றழைக்கப்படும் இந்தோனேசியாவில் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

அதற்குக் காரணம், உலகில் உள்ள எரிமலைகளில் அதிகப்படியான எரிமலைகள் இந்தோனேசியாவில்தான் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் கடலுக்கடியில் உள்ளன. அவையனைத்து உயிருள்ள எரிமலைகளாகும்.

இதையும் படிங்க: ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.