பாகிஸ்தானில் இன்று அதிகாலை 04.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமானது சுமார் 10 கி.மீ. ஆழத்திற்குப் பதிவாகியுள்ளது.
இது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்விட்டரில், “பாகிஸ்தானில் இன்று (அக். 26) அதிகாலை 04. 14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்சரேகை: 36.13, தீர்க்கரேகை: 71.97 என்ற நிலையில், சுமார் 10 கி.மீ. ஆழத்திற்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தில் இதுவரை எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.