ETV Bharat / international

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக ஆன்லைனில் பதிவிட்ட 4 பேர் கைது!

author img

By

Published : Jul 30, 2020, 11:18 AM IST

ஹாங்காங்: அரசுக்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hong Kong
Hong Kong

1996ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடைப்படையில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டு வந்தது. பின்னர் ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவந்த சீனா, அண்மையில் அங்கு புதிதாக இயற்றிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக ஆன்லைனில் கருத்து வெளியிட்டதாகக் கூறி 4 பேர் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் ஆண்கள், ஒருவர் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த ஆதிக்க நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

இதையும் படிங்க: கோவிட் - 19: உலகின் முதல் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம் களமிறக்க தயாராகும் ரஷ்யா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.