பாண்டாக்களுக்கு தாயகமாக விளங்கும் சீனாவில்தான் பல்வேறு வகையான பாண்டா கரடிகள் வாழ்ந்துவருகின்றன. இங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பாண்டா கரடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொதுவாக, பாண்டாக்கள் 20 வயது வரை மட்டுமே உயிர் வாழும். அரிதிலும் அரிதாக சில பாண்டாக்கள் மட்டும் 30 வயதுக்கு மேல் வாழும்.
இதனிடையே, சீனாவில் சோங்கிங் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் உலகின் வயதான பாண்டா கரடியான ஜின்ஜிங்குக்கு (38) பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கேக்கின் மீது பாண்டாக்களுக்கு பிடித்தமான கேரட், தர்பூசணி, மூங்கில் தண்டுகள் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. அந்த பாண்டா கரடி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஜின்ஜிங்கின் குட்டிகள் அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பாண்டா கரடியின் உடல்நிலை குறித்து கண்காணிக்க வாரத்தின் இறுதியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.