வங்க தேசத்தில் முன்ஷிகஞ்ச் பகுதியில் இருந்து 100 பயணிகளை ஏற்றிக் கொண்டு ’மார்னிங் பர்ட்’ எனும் படகு ஒன்று, தலைநகர் டாக்காவிற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சாதர்கட் முனையம் பகுதியில் ’மொயூர் -2’ என்ற மற்றொரு படகு, ’மார்னிங் பர்ட்’ படகுடன் மோதியது.
இதில் நிலைத்தடுமாறிய மார்னிங் பர்ட் படகு நீரில் மூழ்கியதில், 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் 19 ஆண்கள், எட்டு பெண்கள், மூன்று குழந்தைகள் என மொத்தம் 30 பேரின் உடல்களையும் மீட்டனர்.
வங்க தேச உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் மொயூர்-2 படகைக் கைப்பற்றினாலும், அந்த படகின் கேப்டன் மற்றும் இதர அலுவலர்கள் தப்பித்து விட்டனர்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த, நான்கு பேர் கொண்ட குழுவை வங்கதேச உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆணையம் நியமித்துள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத் தாக்குதல் பின்னணியில் யார்? - பாகிஸ்தான் செய்தியாளர் தகவல்