மியான்மரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜனநாயக ஆட்சியை கலைத்து, அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி நடத்திவருகிறது. அந்நாடு உள்நாட்டு கிளர்ச்சி, பாதுகாப்பின்மை, கோவிட்-19, பொருளாதார சீர்கேடு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொண்டுவருகிறது.
ராணுவ ஆட்சி வந்தபின், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை(United Nations) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐநா சபை அவசரக்கால பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மார்டின் கிரிஃப்பித்ஸ்(Martin Griffiths)வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் மனித உரிமை மீறல் அதிகம் காணப்படுகிறது. அங்கு வன்முறை ஓயாமல் தீர்வு காணமுடியாது.
அந்நாட்டில் சுமார் நான்கு லட்சம் பொதுமக்கள் இருப்பிடத்திலிருந்து வேறு இடம் நோக்கி செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் ரோஹிங்கியா (Rohingya)மக்கள் ராணுவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 16 லட்சம் மக்களுக்கு மனித நேய அமைப்புகள் உணவு, பணம் உள்ளிட்ட உதவிகளை அளித்துள்ளன. மேலும் 30 லட்சம் பேருக்கு உதவிக்காக தவித்துவருகின்றனர். அதற்கான வழிவகையை சர்வதேச சமூகம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Afghanistan Taliban : தலிபானை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் இம்ரான் கான் அரசு