ETV Bharat / international

'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?' - வூஹான் கிருமியியல் ஆய்வகம்

பெய்ஜிங்: மூன்று வகையான கரோனா வைரஸ்கள் (தீநுண்மி) வூஹானிலுள்ள ஆய்வகங்களில் உள்ளது என்றாலும் அவை எதுவும் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்துவதில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

Wuhan lab
Wuhan lab
author img

By

Published : May 25, 2020, 1:51 PM IST

கோவிட்-19 தொற்று முதலில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள 55 லட்சத்து 12 ஆயிரத்து 752 பேர் இந்தத் தீநுண்மி தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தீநுண்மி தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே இது வூஹானிலுள்ள கிருமியியல் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற செய்திகளும் உலா வரத் தொடங்கின.

ஆரம்பத்தில் இந்தச் செய்திகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கரோனா தீநுண்மி சீனா ஆய்வகத்திலிருந்துதான் பரவியதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டத் தொடங்கியதும், இந்த விவகாரம் பேசுபொருளானது.

இந்நிலையில், வூஹான் கிருமியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் வாங் யானி கூறுகையில், "எங்கள் ஆய்வகத்தில் தற்போது மூன்று வகையான கரோனா தீநுண்மிகள் உள்ளன. ஆனால் அவை எதுவும் தற்போது பரவிவரும் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்துவதில்லை.

எங்களிடம் உள்ள ஒரு கரோனா தீநுண்மி 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்றை ஏற்படுத்திய கரோனா தீநுண்மியுடன் 96 விழுக்காடு ஒத்துப்போகிறது. ஆனால் தற்போது கோவிட்-19 தொற்றைப் பரப்பும் கரோனாவுடன் எங்களிடம் உள்ள தீநுண்மி 79.8 விழுக்காடு மட்டுமே ஒத்துப்போகிறது.

கோவிட்-19 தொற்றைப் பரப்பும் கரோனா தீநுண்மி ஆய்வகங்களிலிருந்து பரவியதாகக் கிளம்பும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. 2019 டிசம்பர் 30ஆம் தேதிதான் முதன்முதலில் புது வகையான கரோனா தீநுண்மி மூலம் நிமோனியா பரவுவதாகக் கூறி எங்களிடம் மாதிரிகள் சோதனைக்கு வந்தன. அதற்கு முன்புவரை இதுபோன்ற ஒரு புது தீநுண்மி குறித்து எங்களுக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து சென்னை வந்த பூனை - 3 மாதம் தனிமைப்படுத்தல் முடிந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.