கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் ராணுவத் தளபதி சுவேந்திர சில்வா பேசுகையில், ''ஜா-எலாவின் சுடுவெல்லாவில் கரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 29 கடற்படை வீரர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெலிசாரா பகுதியில் அமைக்கப்பட்ட கப்பல் படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை வீரர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், பணி முடிந்து சொந்த ஊருக்கு விடுமுறை திரும்பிய அனைத்து கப்பல் படை வீரர்களும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளா உடனடியாக பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
இதன்மூலம் இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கிம் உடல்நிலை குறித்த வதந்திகள் போலியானவை - ட்ரம்ப் தகவல்