டாக்கா: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ளார். இவரின் பயணத்துக்கு இஸ்லாமிய மதஅடிப்படைவாத அமைப்பான ஹெபசாத்-இ-இஸ்லாம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இவர்கள் ஆங்காங்கே சில இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) தொழுகைக்கு பின்னர், ஹெபசாத்-இ-இஸ்லாம் மதஅடிப்படைவாதிகள் டாக்கா, சட்டோகிராம், பிரம்மன்பரியா உள்ளிட்ட பகுதிகளில் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினார்கள்.
இதேபோல் பால்தான், குலிஸ்தான், பைதுல் முஹரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) போராளிகள் அருயில் காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தினார்கள். மேலும், காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் காவலர்கள் 26 பேர் காயமுற்றனர். இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், “உள்ளூர் மக்களுடன் பல ஆயிரம் மதரசா மாணவர்கள் மதியம் 2 மணிக்கு அருயில் பஜாரில் பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணி மௌலான அபுதாகிர், ஹொசைன் அகமது, மஹ்முதூர் ரஷீத் மற்றும் ஒலியுல்லா ஆகியோர் தலைமையில் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பயணத்திற்கு எதிராக நடந்தது.
அப்போது நடந்த வன்முறையில் ஃபரித்பூர் மாவட்டத்தின் பங்காவில், காவல் நிலையத்தின் பிரதான வாயில் மற்றும் இரண்டு காவல் மோட்டார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.