ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மாண்டினில் தாலிபான் பயங்கரவாதிகள் தொடுத்துவரும் தாக்குதலை தடுக்க அம்மாகாணத்தில் ஆப்கான் அரசின் சிறப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவமும் பொருளாதார முக்கியத்துவமும் பெற்ற ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான நாவே-இ-பராக்ஸாயில் தாலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
அதில் அங்கு பதுங்கியிருந்த 25 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : "விரைவில் பெருந்தொற்று இல்லாத காலம்" - உலக சுகாதார அமைப்பு