கரோனா பாதிப்பிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கரோனா பாதித்த நபர்களுக்காகவும், கரோனா பாதித்த நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை எளிதில் கண்டறியும் வகையிலும், புதிதாக கோவிட் சேஃப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த செயலி அறிமுகமான 12 மணி நேரத்திலேயே பிரபலம் அடைந்து சாதனை படைத்த நிலையில், தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தரவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறுகையில், "கோவிட் சேஃப் செயலியை 2.44 மில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். சுகாதார ஊழியர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். கடந்த ஏழு நாள்களில் 100 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆஸ்திரேலியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தி 727 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா இல்லாததால் மருத்துவமனைகளை மூடும் சீனா