பாகிஸ்தானின் கராச்சி அருகேயுள்ள குல்பகார் நகரில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்தக் கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மீட்புப் படையினர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் களமிறங்கினர்.
இந்த விபத்தில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய முதலுதவி வழங்க வேண்டும் என்ற சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா உத்தரவின்பேரில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.