ஆப்கானிஸ்தானில் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாலா ஹிசார் ராணுவத் தளம் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். சில நிமிடங்களுக்கு ராணுவ தளம் தலிபான் கட்டுபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த 12 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, தகவலறிந்து ராணுவ தளத்திற்கு காரில் வந்த இரண்டு காவல் துறையினர், சாலையோர வெடிகுண்டு மீது மோதியதில் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் அல்லது படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இச்சம்பவம் குறித்து தலிபான் கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக, பக்மான் மாவட்டத்தில் கார் குண்டுத் தாக்குதலால் ராணுவத் தளம் குறிவைக்கப்பட்டது. அங்கு குறைந்தது இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.