அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கத்திற்கும் 15 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், அங்கு தலிபான் அமைப்பை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அமெரிக்கா அறிவித்தது.
இதையடுத்து தலிபானுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி சுமார் ஐந்தாயிரம் தலிபான்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அங்கிருந்து அமெரிக்க படைகளை நாடு திருப்பும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுவந்தாலும், மறுபுறம் ஒப்பந்தத்தை மீறும் விதமாக தாக்குதல்களும் அரங்கேறிவருகிறது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கார் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில், 13 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒப்பந்ததில் விடுதலையான தலிபான் தலைவரும் கொல்லப்பட்டார் என ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் அமைதி ஒப்பந்தத்திற்கு குந்தகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த முடியாது: லண்டன் நீதிமன்றம் திட்டவட்டம்