இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பத்து சுரங்க தொழிலாளர்கள் கீழ் பகுதியில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், அச்சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பத்து தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.
இது குறித்து மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பின் அவசர பிரிவு தலைவர் அப்துல் ரஹீம் சின்ஹுவா கூறுகையில், "நிலச்சரிவு ஏற்பட்டதில் பத்து சுரங்க தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
சுரங்கத் தொழிலாளர்களிடம் உள்ள உணவுப் பொருள்கள் மூன்று நாள்களுக்கு மட்டுமே போதுமானது. மீட்கப்பட்டவர்கள் நிலத்தடி தளத்திற்குள் நுழையக்கூடிய வகையில் பம்புகள் மூலம் சேற்றை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம். சேற்றை அகற்ற அதிக சக்தியுடன் கூடிய அதிக பம்புகள் தேவை" என்றார்.
இதையும் படிங்க: மேகாலயா நிலச்சரிவில் இரண்டு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் உயிரிழப்பு - மூவர் மாயம்!