வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா(26) இன்று உயிரிழந்தார். ஜெயின் நாதெல்லா பிறந்தது முதலே பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று காலை உயிர்பிரிந்தது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கு தனிப்பட்டமுறையில் மின்னஞ்சல் அனுப்பி, மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொண்டுள்ளது.
இதுகுறித்து சத்ய நாதெல்லா கூறுகையில், "ஜெயின், 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 11:29 மணிக்கு பிறந்தார். அன்றிலிருந்து எங்களது வாழ்க்கை இவ்வளவு கடினமாக மாறும் என்று தெரியாது. அடுத்த இரண்டாண்டுகளில், பெருமூளை வாதம் காரணமாக ஜெயினுக்கு சக்கர நாற்காலி தேவைப்பட்டது. நானும் அனுவும் சிதைந்து போனோம்" என்று உருக்கமாக தெரிவித்தார். சத்ய நாதெல்லா 2014ஆம் ஆண்டு தலைமை செயல் அலுவலராக பொறுப்பேற்றது முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதிலும், வழங்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்திவருவது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: வீடியோ கேம் டெவலப்பர் பங்கியை வாங்கிய சோனி பிளேஸ்டேஷன்