கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் கடுமையாகவுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள்கூட முற்றிலும் முடங்கியுள்ளன. கோவிட்-19 தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகிலுள்ள பல்வேறு முன்னணி ஆராய்ச்சியாளர்களும் கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றுவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வீர் பயோடெக்னாலஜி ஆய்வகத்தைச் சேர்ந்த டேவிட் கோர்டி என்பவரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் வீஸ்லர் என்பவரும் இணைந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளனர்.
அதாவது 2003ஆம் ஆண்டு சார்ஸ் என்ற தொற்று ஒரு வகையான கரோனா தொற்று மூலம் பரவியது. அதேபோல 2013ஆம் ஆண்டு மெர்ஸ் என்ற தொற்றும் மற்றொரு வகையான கரோனா வைரஸ்கள் (தீநுண்மி) மூலம் பரவியது.
இந்தத் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் உடல்களில் உருவாகும் ஆன்டிபாடிகளைக் கொண்டு கோவிட்-19 தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பு பரவிய கரோனா தீநுண்மிகளும் இப்போது பரவும் கரோனா தீநுண்மியும் ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பதால், இந்த ஆன்டிபாடிகள் பயன்தருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், ஆரம்பகட்ட சோதனைகளில் இந்த ஆன்டிபாடிகள் கரோனா தொற்றைத் தடுப்பதில் வெற்றியடைந்துள்ளது தெரிவதாகவும் விரைவில் இது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?'