அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இதனால் அமெரிக்காவில் இருகட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்கத் தேர்தலில் பிரதிபலிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் சில நாள்களுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'கரோனா தடுப்பூசி ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக அது மக்களுக்கு கிடைக்கும்' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதனை விமர்சித்து கமலா ஹாரிஸ் பேசியுள்ளார். அதில், 'அதிபர் தேர்தலுக்கு முன்பாக கரோனா தடுப்பூசி கிடைத்தால், அவற்றின் திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ட்ரம்ப்பை நம்ப மாட்டேன். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி நம்பகமான நபர் உறுதியளித்தால் மட்டுமே நம்புவேன்' என்றார்.
இதையும் படிங்க: ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்த விவகாரம் - ட்ரம்ப் பரபரப்புக் கருத்து