ETV Bharat / international

ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவளித்ததை இம்ரான் மறுக்கமுடியுமா? இந்தியா சரமாரி கேள்வி

author img

By

Published : Sep 28, 2019, 10:52 AM IST

வாஷிங்டன்: பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவளிக்கவில்லை என நியூயார்க் வாசிகளிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுக்கமுடியுமா என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

vidisha maitra

74ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரைக்கு, பதிலளித்த வெளியுறவுத் துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா, "வேற்றுமைகளை அகலப்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்ட நினைக்கிறார் இம்ரான் கான். அணு ஆயுதங்களைக் கொண்டு போர் புரிவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுவது நல்ல தலைவருக்கு அழகல்ல" என கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐநா பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 130 பேருக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கவில்லை என்று நிரூபிக்க முடியுமா? ஒசாமா பில்லேடனுக்கு தான் வெளிப்படையாக ஆதரவளித்ததை நியூயார்க் வாசிகளிடம் இம்ரான் மறுக்கமுடியுமா?" என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ஓரே நாடு பாகிஸ்தான் தான் என்றும், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளதா என்று ஆய்வு செய்த ஐநா கண்காணிப்பாளர்களுக்கு இம்ரான் கானே அழைப்பு விடுத்துள்ளதால், அவர் கூறியது போல ஐநா அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.