73ஆவது சதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினம் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
'ஜனநாயகம் இருநாட்டு உறவுகளையும் வலுவூட்டுகிறது' - பாம்பியோ
அமெரிக்கா சார்பில் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, "சுதந்திர தினம் கொண்டாடும் அனைத்து இந்திய மக்களுக்கும் அமெரிக்கா சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
72 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது. ஜனநாயக விழுமியங்கள், மக்களுக்கு இடையேயான இணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய பொது குணங்கள் இருநாட்டு உறவையும் வலுவூட்டியுள்ளது" என்றார்.
உலக அரங்கில் இந்தியா ஆளுமைமிக்கது: ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்
சுதந்திர தினம் கொண்டாடி வரும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 'பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா சாதானை படைந்துள்ளது. மேலும், உலக அரங்கில் இந்தியா ஆளுமைமிக்க நாடாக விலங்கிவருகிறது. கூட்டு முயற்சியால், பிராந்திய, சர்வதேச பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை கூட்டங்களும், பல்வேறு துறைகளில் நம்மிடையை உள்ள ஒத்துழைப்பானது வலுவடையும்.
அத்துடன், ஆசியாவில் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் காக்கவும் இது உதவும். இந்திய மக்களின் ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்க்கைக்கும், வெற்றிக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.