சான் டியாகோ பகுதியில் வசித்து வருபவர் கர்லா. இவர் தனக்குச் சொந்தமான வேனில் 300கும் மேற்பட்ட எலிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக். 8-ஆம் தேதி சான் டியாகோ ஹ்யுமேன் சங்கத்திற்கு (San Diego Humane Society) கர்லாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கர்லா தன்னிடமுள்ள எலிகளை அடக்கமுடியவில்லை.. என்னைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக கர்லாவின் வேன் அருகே சென்ற அலுவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வேனுக்குள் 300க்கும் அதிகமான எலிகள் இருந்துள்ளது.
இது குறித்து கர்லாவிடம் அலுவலர்கள் விசாரித்த போது," நான் முதலில் இரண்டு எலிகளைத் தான் வளர்த்து வந்தேன். பின்னர் வாரத்திற்கு நான்கு குட்டிகள் என தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து தற்போது எண்ண முடியாத அளவிற்கு எலிகள் பெருகிவிட்டது. நான் அனைத்து எலிகளையும் நன்றாகவே பரமாரித்து வந்தேன் ஆனால் தற்போது எலிகளை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் அலுவலர்களைத் தொடர்பு கொண்டேன் எனக் கூறினார்.
இச்சம்பவம் குறித்து அலுவலர் குக் கூறுகையில்," நாங்கள் வந்துபார்த்தபோது பல எலிகள் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது. பல எலிகள் வேன் இருக்கையிலும்,கதவின் ஓரத்திலும் ஒளிந்து கொண்டு இருந்தது. பின்னர் கர்லாவின் அனுமதியோடு அனைத்து எலிகளையும் அலுவலர்கள் பிடிப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகியுள்ளது. நாங்கள் கைப்பற்றிய 320 எலிகளில் 100க்கும் அதிகமான எலிகள் தத்து கொடுப்பதற்கான நிலையில் தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி: புகைப்படங்கள் வைரல்