அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா ஐவோன் மன்ராய் (28), தனது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவழித்துவருகிறார். ஜன்னல்களை மூடியபடியே நகரும் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சிறு வயதிலேயே ஆண்ட்ரியா 'ஜெரோடெர்மா பிக்மென்டோசம்' (xeroderma pigmentosum) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் இந்த நோயின் விளைவானது, அவர்களின் சருமத்தின் உணர்திறனை அதிகரிப்பதால், எளிதாக, தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர் தோல் புற்றுநோயால் 28 முறை பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று மீண்டுவந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு உள்ள நோயின் தன்மையை அறிந்துகொள்ள, நீண்ட நாள்கள் தேவைப்பட்டன. இதனால், எனது உடல் வளர்ச்சியும் அதிகளவில் உள்ளது. 23 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. திருமணம் செய்துகொள்வதையும் தவிர்த்துவிட்டேன். இரவு நேரத்தில் மட்டும்தான் வெளியே செல்வேன்.
சில சமயங்களில் மருத்துவரைப் பார்க்க பகல் நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, பாதுகாப்பான உடைகள் மூலம் சருமத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டு செல்வேன். இதுவரை 28 முறை புற்றுநோய் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இருபதில் எப்படியோ அறுபதிலும் அப்படித்தான்' - கெத்து காட்டிய யோகா மாஸ்டர்