இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், இது இரு நாடுகளுக்கிடையேயான நல்ல உரையாடலாக இருந்தது என்றார். அமெரிக்க அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க உறுப்பு நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உடனடியாகத் தகவல்களை வெளியிட வேண்டும் எனவும், கரோனா பாதிப்பில்லாத சில பகுதிகளை கட்டமைக்கத்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜி-20 மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கரோனா குறித்த உடனடித் தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மருத்துவ வல்லுநர்களுடன் கரோனா தொற்று குறித்து ஆலோசித்துவருவதாக என்று சொன்ன அவர், அமெரிக்காவில் கரோனா தாக்கம் குறித்து மற்ற நாடுகள் முழுவதுமாக அறிய வாய்ப்பில்லை என்றார். தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்க நாடுகளில் இதுவரை 82 ஆயிரத்து 404 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது சீனாவில் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையைவிட அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கரோனா