அமெரிக்காவின் கிலியட் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி. எதிர்ப்பு மருந்துகளான லோபினாவிர்-ரிடோனாவிர், இன்டர்ஃபெரான் ஆகியவற்றை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11 ஆயிரத்து 266 கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தி உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது.
கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து கடந்த ஆறு மாதமாக உலக சுகாதார அமைப்பு ஆய்வுசெய்து வந்தது.
"30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11 ஆயிரத்து 266 கரோனா நோயாளிகள் மீது பயன்படுத்தியதில் அவை அனைத்துமே கரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்து இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் மூலம் இறப்பு விகிதம், நோயாளிகளின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை" என உலக சுகாதார அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான அதிபர் ட்ரம்புக்கு வழங்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்துகளில் ரெம்டெசிவிரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.