ETV Bharat / international

'பிரஸ்மீட் என்பது டோட்டல் டைம் வேஸ்ட்' - கடுப்பான ட்ரம்ப் - அமெரிக்க வெள்ளைமாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை, நேரத்தை வீணடிக்கும் செயல் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Apr 26, 2020, 12:04 PM IST

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதையடுத்து அதிபர் ட்ரம்ப்பிற்கு அழுத்தம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தலை ட்ரம்ப் எதிர்கொள்ளும் நிலையில், இம்முறை எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என கரோனா தடுப்பு நடவடிக்கையில் ட்ரம்ப் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.

தனது செயல்பாடுகள் குறித்து தினமும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் விரிவாக விளக்குவது வழக்கம். அனைத்து புதிய வழிமுறைகளையும், ஆராய்ச்சியாளர்களின் முன்னெடுப்புகளையும் ட்ரம்ப் உடனுக்குடன் ட்வீட் செய்துவிடுவார்.

இந்நிலையில், கரோனா பாதித்தவர்கள் விரைவில் குணமடைய வைரஸை அழிக்கும் கிருமிநாசினிகளை உடலின் உள்ளே ஊசி மூலம் செலுத்த, ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் இந்தச் சொற்களால், அதிர்ச்சியடைந்த அந்நாட்டு ஊடகத்தினர், இந்தப் பேச்சை பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து, வறுத்து எடுத்துவிட்டனர்.

'நான் கிண்டலாக கூறிய விஷயத்தைப் பெரிதுபடுத்தி, ஊடகத்தினர் என் மீது வீண்பழி சுமத்துவதாக’ விளக்கமளித்த ட்ரம்ப், 'செய்தியாளர் சந்திப்பு என்பது டோட்டல் டைம் வேஸ்ட்' எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'மக்களுக்குத் தான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்காமல், போலி செய்திகளைப் பரப்புவதையே ஊடகங்கள் வேலையாகக் கொண்டுள்ளன. மொத்தத்தில் செய்தியாளர் சந்திப்பு நேரத்தை வீணடிக்கும் செயல்' என அதிபர் ட்ரம்ப் கடுப்பாகப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கோமாவில் வடகொரிய அதிபர்? - விரைந்த சீன மருத்துவக் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.