அமெரிக்காவில் கரோனா வைரஸ் நிலவரம் குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டோர் அடங்கிய கரோனா பணிக் குழு தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்து வருகிறது.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், "கரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் உடலில் கிருமி நாசினியைச் செலுத்தினால் என்ன" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டி மருத்துவர்கள், எதிர்க்கட்சிக்கார்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ட்ரம்ப்பின் இந்தப் பேச்சை விமர்சித்து செய்தித்தாள்களில் கட்டுரைகளும் வெளியாயின.
இதனையடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த கரோனா வைரஸ் பணிக்குழு செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
இனி வரும் கரோனா வைரஸ் செய்தியாளர் சந்திப்புகளும் ட்ரம்ப்பின் பங்கைக் குறைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்கள் சந்திக்கும் பொறுப்பைத் துணை அதிபர் மைக் பென்சிடம் ஒப்படைக்குமாறும் ட்ரம்ப்புக்கு அவரது ஆலோசகர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ’மாநில உரிமைகளை மத்திய அரசின் காலடியில் வைத்துவிட்டு என்னை விமர்சிப்பதா’ - ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!