ஃபேஸ்புக்கில் பணியாற்றும் சிலர் நிறவெறியை சந்தித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாருக்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிர்வாகம் இதுதொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ளது.
அதில், "நிறவெறி புகாருக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது காலப்போக்கில் வளர்ந்து ஒரு கலாசாரமாக உருவெடுத்துவிடும். இதனை அங்கீகரிக்க, ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஃபேஸ்புக் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. அமெரிக்காவின் எதிரணி அதிபர் வேட்பாளர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் குறித்து நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.