ETV Bharat / international

தெற்கு ஓரிகான் நகரத்தை சூழ்ந்த காட்டுத்தீ!

ஓரிகான் : அமெரிக்காவின் மேற்குப் பகுதி காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால், சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

WATCH: Wildfire engulfs southern Oregon town

author img

By

Published : Sep 12, 2020, 2:05 PM IST

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓரிகான் மாகாணத்தின் காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீ பல ஏக்கர் கணக்கிலான காடுகளை முற்றிலுமாக அழித்துள்ளது. இந்தக் காட்டுத்தீ, தற்போது தெற்கு ஓரிகான் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள நகரங்களையும் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து நகர் பகுதிகளில் வசித்து வந்த சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். மேலும், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன.

தெற்கு ஓரிகான் நகரத்தைச் சூழ்ந்த காட்டுத்தீ

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள், தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேசமயம் தற்போது ஓரிகான் பகுதியில் வானிலை மாற்றம் ஏற்பட்டு காற்றின் வேகம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, காட்டுத்தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஜோர்டன் ராணுவ சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.