கலிபோர்னியாவில் சான் டியாகோ பகுதியில் உள்ள வனவிலங்கு பூங்கா ஊரடங்கால் சுமார் இரண்டு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூங்காவில் உள்ள அரியவகை அமுர் சிறுத்தை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவரை இரண்டு குட்டிகளுக்கும் பெயர் சூட்டப்படவில்லை. இருப்பினும், மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் சிறுத்தை குட்டிகள், தனது வழக்கமான குறும்புத் தனத்தில் ஈடுபடுகிறது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுகுறித்து வனவிலங்கு பராமரிப்பு நிபுணர் கெல்லி மர்பி கூறுகையில், "குட்டிகள் பாறைகள் மீது ஏறுவதும், மரங்களுக்குள் நுழைவது என சேட்டைகளில் ஈடுபட்டுவருகின்றன. தாயின் பேச்சை கேட்டு நடக்கும் சிறுத்தை குட்டிகள், சில சமயம் தாயாரின் பேச்சை கேட்காமல் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கின்றன" என்றார்.
இவ்வகை அரியவகை அமுர் சிறுத்தைகள் ரஷ்யா, சீனா வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
இதையும் படிங்க:திரிபுராவில் அரிய வகை 3 பன்றிக்குட்டிகள் கண்டுபிடிப்பு!