ETV Bharat / international

மார்வெல்லை ரியலாக்கிய டிஸ்னிலேண்ட் 'அவஞ்சர்ஸ் கேம்பஸ்'

author img

By

Published : Jun 4, 2021, 1:58 PM IST

கலிபோர்னியா: மார்வல் ரசிகர்களுக்காக டிஸ்னிலேண்ட் அட்வெஞ்சர் பார்க்கில், புதிதாக அவஞ்சர்ஸ் கேம்பஸ் திறக்கப்பட்டுள்ளது.

Disneyland
'அவஞ்சர்ஸ் கேம்பஸ்'

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் அட்வெஞ்சர் பார்க்(Disneyland Adventure Park), கரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் கலிபோர்னியா வாசிகளுக்காக பார்க் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஜூன் 15 ஆம் தேதி, எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து விதமான பார்வையாளர்களுக்காகவும் திறக்கப்படவுள்ளது.

மார்வெல்லை ரியலாக்கிய டிஸ்னிலேண்ட் 'அவஞ்சர்ஸ் கேம்பஸ்'

மக்களைக் கவர்வதற்காக,டிஸ்னிலேண்ட்-இல் புதிதாக "அவஞ்சர்ஸ் கேம்பஸ்"(Avengers Campus) திறக்கப்பட்டுள்ளது. மார்வெல் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தக் கேம்பஸ் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கேம்பஸில் ஸ்பைடர் மேன், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், வகான்டா வாரியர்ஸ் போன்ற ஆடைகளில் பலர் ஸ்டன்ட் செய்வதும், மேஜிக் ட்ரிக்ஸ் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

Marvel superheroes
காவலில் வகான்டா வாரியர்ஸ்

அங்கு, பல விதமான மார்வெல் சாதனங்களும் விற்பனை செய்யப்படுகிறது. படத்தில் கண்ட சாகசத்தை, நேரில் தத்ரூபமாகப் பார்த்திட யாருக்குத் தான் ஆசை இருக்காது. பார்வையாளர்களை வரவைக்கும் நோக்கில், அவஞ்சர்ஸ் கேம்பஸின் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. பலரும் ட்விட்டரில் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.