அமெரிக்காவில் போர்ட்லேண்ட் பகுதியில் இயங்கி வரும் ஓரிகான் வன உயிரியல் பூங்கா (Oregon Zoo) ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்களைச் சந்திக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் வன விலங்குகள் தங்களது நேரங்களை வித்தியாசமான முறையில் செலவிட்டு வருகின்றன.
சில விலங்குகள் பூங்காவுக்குள் வாக்கிங் செல்கிறது, மீன் அக்வேரியத்தைப் பார்வையிடுவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 10 வயதான தகோடா (Takoda) கரடி , தண்ணீர் நிரப்பிய தொட்டிக்குள் ஆனந்த குளியலில் ஈடுபட்டது. கரடியின் குளியல் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
கடந்த 2010இல் மொன்டானா (Montana) பகுதியில் தனிமையிலிருந்தக் கரடியை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். உடல்நிலை மோசமாக காணப்பட்ட கரடிக்குச் சிகிச்சையளித்து, ஓரிகான் வனப்பூங்காவுக்கு கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க: ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி