ETV Bharat / international

போக்குவரத்தில் புதிய புரட்சியா? ஹைப்பர்லூப்‌ மனித சோதனை வெற்றி! - போக்குவரத்தில் புதிய புரட்சியா..

லாஸ் வேகஸ்: விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் புதிய ஹைப்பர்லுப் மனித சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ypee
yper
author img

By

Published : Nov 9, 2020, 7:01 PM IST

பிரபலமான விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம், போக்குவரத்தில் புதிய வரலாற்றை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. ஹைப்பர்லுப் மூலம் மனிதர்கள் மற்றொரு இடத்திற்கு மின்னல் வேகத்தில் பயணிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டமானது அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாஸுக்கு வெளியே பாலைவனத்தில் உள்ள நிறுவனத்தின் டெவ்லூப் சோதனை பாதையில் நடைபெற்றது. இதன் மீதான நம்பிக்கையின் காரணமாக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜோஷ் கீகல் மற்றும் பயணிகள் அனுபவ இயக்குநர் சாரா லூச்சியன் ஆகியோர் முதல் இரண்டு பயணிகளாக தங்களது பயணத்தை ஹைப்பர்லூப்பில் தொடங்கினர்.

சோதனையின்போது, இந்த ஹைப்பர்லூப் பயணித்த வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 160 கி.மீ. ஆகும், ஆனால் இறுதியில், இந்த காற்று இல்லாத குழாய்கள் வழியாக மனிதர்கள் மணிக்கு 1,223 கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் சர் ரிச்சர்ட் பிரான்சன் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக, விர்ஜின் ஹைப்பர்லூப் குழு அதன் அற்புதமான தொழில்நுட்பத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதில் ஈடுபட்டுள்ளது.

இன்றைய வெற்றிகரமான சோதனையின் மூலம், இந்த கண்டுபிடிப்பு உண்மையில் எல்லா இடங்களிலும் வாழும் மக்களின் பயணிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதைக் காட்டியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஹைப்பர்லூப் என்பது ஒரு புதிய போக்குவரத்து பயன்முறையாகும். இது ஒரு நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், பொருள்களை அதிவேகத்தில் குழாய்கள் அல்லது சுரங்கங்கள் வழியாக கொண்டுசெல்கிறது. இதில் பயணிக்கும்போது நியூயார்க், வாஷிங்டன் இடையிலான பயணம் அரை மணி நேரமாக குறையும்.

இது விமானத்தைவிட இரண்டு மடங்கும், அதிவேக ரயிலின் பயண நேரத்தை விட நான்கு மடங்கும் குறைவு. இதற்கு முன்னதாக பயணிகள் இல்லாமல் 400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.