இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் ஆலோசகராக 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவருமான உஷா ராவ் மோனாரியை, ஐநாவின் அண்டர் செக்ரட்டரி ஜெனரல், வளர்ச்சி திட்டத்தின் இணை நிர்வாகியாக நியமித்து பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், 160 நாடுகளில் ஏழ்மையை ஒழித்து சமத்துவமின்மையை குறைக்க இந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டுவருகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், ஜம்னாலால் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் முதுகலை பட்டம் முடித்த உஷா ராவ் மோனாரி, குளோபல் வாட்டர் டெவலப்மெண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றிவந்துள்ளார்.