ETV Bharat / international

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா!

வாஷிங்டன்: பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

author img

By

Published : Nov 5, 2019, 1:15 PM IST

Paris climate deal

புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்து உருவாக்கப்பட்டதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. மேலும், 2016ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேற முடியாது.

2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்தார். ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகப்போவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா போதுமான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் இந்த ஒப்பந்தம் தங்கள் நாட்டுக்கு எதிராக உள்ளதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த முடிவுக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு ஒரு வரலாற்றுப் பிழை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கிரேட்டா நம் காலத்துக்கான தலைவர்' - புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.