ETV Bharat / international

'சீன ராணுவத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தயார்' - பாம்பியோ

சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 26, 2020, 9:16 PM IST

Pompeo
Pompeo

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சீனாவின் அதிதீவிர போக்கு குறித்தும், அந்நாட்டு ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தென் சீனக் கடல் பகுதியிலும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் சீன ராணுவம் தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்து சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது.

இந்தச் சிக்கலை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் திட்டமிட்டு போலி தகவல்களைப் பரப்பி வருகின்றன எனவும்; மைக் பாம்பியோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மற்ற நாடுகளைப் போலவே ஐரோப்பாவும் சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், சீனா தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.