இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, "வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். வடகொரியா அதனிடம் உள்ள அணு ஆயுதங்களை விட்டொழித்து தன் மக்களுக்கு வாய்ப்புகள் உருக்க அமைதிப் பாதையை தேர்ந்தெடுக்கும் என நாங்கள் நம்பிகிறோம்" என்றார்.
முன்னதாக, அமெரிக்கா நடந்துகொள்வதைப் பொறுத்தே எந்த மாரியான கிறிஸ்துமஸ் பரிசை வழங்கலாம் என்று முடிவு செய்வோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே மைக்கில் பாம்பியோ இவ்வாறு பேசியுள்ளார்.
இதையும் படிங்க : அணு ஆயுதப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது: வடகொரியா