உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், கரோனா வைரஸுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மும்முரமாக உள்ளது. ஏற்கனவே, 3 தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அடுத்ததாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மருந்தும் இறுதி பரிசோதனைக்கு முன்னேறியுள்ளது.
கிடைத்த தகவலின்படி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் சிறிய அளவிலான டோஸ் அளவிலே, கரோனா தொற்றை எதிர்க்கும் வலிமை உள்ளது என்றும், அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதால் கரோனா வைரஸை எளிதாக குணப்படுத்திய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது, இந்த தடுப்பூசி மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.
முன்னதாக, இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
குறிப்பாக நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் விநியோகிக்க ஒரு தடுப்பூசி தயார் நிலையில் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.