சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தை இங்கிலாந்தின் 5ஜி நெட்வொர்க்கிலிருந்து நீக்கி, அதை தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவும் உரிமை மீறல் காரணமாக ஹவாய் ஊழியர்களுக்கு விசா வழங்க தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் பாம்பியோ கூறுகையில், “உலக அளவில் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஹவாய் ஊழியர்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகெங்கிலும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். ஹவாய் நிறுவனத்துடன் வியாபாரம் செய்கிறார்களானால், அவர்கள் மனித உரிமை மீறல்களுடன் வியாபாரம் செய்கிறார்கள் என பொருள்படும் என்று டிக்டாக் உள்ளிட்ட தரவு திருட்டு செயலிகளை தடுப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரர்களுக்கு இறுதி மரியாதை அளிக்க மறுக்கும் சீனா - அமெரிக்க உளவுத்துறை தகவல்