ETV Bharat / international

10 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அனுப்ப அமெரிக்கா திட்டம்!

நியூயார்க்: இந்தியாவிற்கு 10 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அனுப்பிட அமெரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

AstraZeneca
அஸ்ட்ராஜெனெகா
author img

By

Published : Apr 27, 2021, 9:35 AM IST

இந்தியாவில் கரோனா 2ஆம் அலை ருத்ரதாண்டம் ஆடிவருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் இந்தியாவிற்கு, பல உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

அதன்படி, இந்தியாவிற்கு மில்லியன் கணக்கில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அனுப்பிட அமெரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய பைடன் நிர்வாகத்தின் மூத்த அலுவலர், "இந்தியாவிற்கு 10 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏற்றுமதியானது கூட்டாட்சி பாதுகாப்பு (federal safety) ஆய்வுசெய்த பின்னரே நடைபெறும். அது வரவிருக்கும் வாரங்களில் நிகழக்கூடும்" எனத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 60 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திட அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பல் - 53 மாலுமிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.