சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கப்பட்ட இந்நபர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்தவர். 30 வயதே நிரம்பிய இந்நபருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்ட பின்பு இவர் நல்ல நிலைமையில் உள்ளார் என அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவரால் அங்குள்ள மக்களுக்கோ, அவரை சோதனை செய்த சுகாதார அலுவலர்களுக்கோ எந்தப் பாதிப்புமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது உலகெங்கிலும் இருக்கும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு வைரஸ் தாக்குதல் குறித்த அறிகுறிகள் இருக்கின்றனவா என்று தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சீனாவில் சார்ஸ் நோய்: மேலும் ஒருவர் உயிரிழப்பு