அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் (திங்கள்கிழமை) இந்தியா வருகிறார். இதுதொடர்பான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வேளையில், ட்ரம்ப்பின் பயணம் குறித்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் உயர் அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான நீடித்த, வலுவான உறவை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. இருநாடுகளுக்கும் பொதுவான ஜனநாயக பாரம்பரியம், மக்களின் நெருக்கம், ராஜதந்திரம் ஆகியவை இந்த உறவின் அடித்தளமாக விளங்குகிறது. அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி இடையே நிலவும் நெருக்கம் இந்த உறவுக்கு மென்மேலும் வலுசேர்ந்துள்ளது.
இந்தப் பயணத்தில் பொருளாதார, ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தூணாக இந்திய விளங்கிறது. பயணத்தின் இரண்டாம் நாளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிபர், இந்திய முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் உற்பத்தி துறைக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க : அ(மெரிக்கா)ங்கே 'ஹவுடி மோடி', இ(ந்தியா)ங்கே 'நமஸ்தே ட்ரம்ப்'